இவ்வளவு வாக்காளர்கள் நீக்கம் நெருடுகிறது – ப.சிதம்பரம் பதிவு

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பின்னர் தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அவற்றில்,

குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.4 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்,வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3.98 இலட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்,இறந்தோர் 26.9 இலட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்,

மொத்தமாக 97.28 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் 5.43 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் பட்டியலிலிருந்து இவ்வளவு பேர் நீக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டு மக்களிடம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரசு மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில்…

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,32,672 மற்றும் இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278 என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது.

எல்லா அரசியல் கட்சிகளின் தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும். இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மெய்யான நபர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Leave a Response