
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
அண்மையில் எடப்பாடியுடன் பாஜக கூட்டணி அறிவிப்பு வந்தது.அதன்பின், தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு வந்தார். இதனால்,வெறுத்துப்போய் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் 2 முறை சந்தித்துப் பேசினார்.
இதனால் அரண்டு போனது பாஜக.இப்போது அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணியில் இணைக்க முயல்கிறது.
ஆகஸ்ட் 26 இல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி மூலமாக, ஓபிஎஸ் சந்திப்பை நிகழ்த்தி அவரை மீண்டும்
கூட்டணியில் இணைக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே, அவருக்கு எதிராக யாரும் இனி பொது
வெளியில் பேசவோ, சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிடவோ கூடாது என்றும், விமர்சிக்கவும் கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
தேசிய சனநாயகக் கூட்டணியில்தான் நான் இருக்கிறேன் என்று அவர் பலமுறை சொன்னபோதும் கண்டுகொள்ளாத பாஜக, வெளியேறுகிறேன் என்று சொன்ன பிறகு அவரிடம் சரணாகதி அடைகிறது என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் வருகின்றன.


