விஜய் தந்தைவழி தெலுங்கர் தாய்வழி மலையாளி – அருகோ அதிர்ச்சித் தகவல்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். அதன் பெயர் தமிழக வெற்றிக் கழகம்.அக்கட்சி சார்பாக அக்டோபர் 27 அன்று மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தமிழ்த் தேசியத் தலைவர்களில் ஒருவரான அருகோ தமது எழுகதிர் ஏட்டில் விஜய் குறித்து ஓர் அதிர்ச்சித் தகவலைச் சொல்லியிருக்கிறார்.

அதன் விவரம்…

அருகோ நடத்தும் எழுகதிர் செப்டம்பர் மாத இதழில் இடம்பெற்ற அருகோ விடைகள் பகுதியில்…

வினா: நடிகர் விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று செந்தமிழன் சீமான் அறிவித்திருப்பது பற்றி உங்கள் கருத்து?

விடை: இதுவரை தமிழ்த் தேசியத்துக்கு அப்பால் எவருடனும் எந்தத் தேர்தலிலும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று தனித்துப் போட்டியிட்டுச் சாதனை படைத்து வந்ததற்கு இது முரணானதாகும்.

விஜய், தந்தை வழி தெலுங்கர், தாய்வழி மலையாளி என்று சொல்லப்பட்டாலும் தமிழக வெற்றிக் கழகம் என்று தன் கட்சிக்குப் பெயர் வைத்திருப்பதைப் பாராட்டலாம்.அதேவேளை,அவர் நட்சத்திரத் தகுதி பெற்று அவர் சொல்வதைத் தயாரிப்பாளர்கள் கேட்டாக வேண்டுமென்ற நிலை வந்த பிறகு அவர் நடித்த ஒரு படத்திற்குக் கூடத் தமிழ்ப் பெயர் கிடையாது.பிகில்,மாஸ்டர்,லியோ,பீஸ்ட் எனத் தமிழைப் புறக்கணித்த பெயர்களே.

அடுத்து கட்சி தொடங்கிய பிறகு வந்திருக்கும் படத்திற்குக் கூட தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்றுதான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இத்தமிழ் விரோதியோடு நாம் தமிழர் கட்சி கூட்டு என்பது சரியாகப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இதில் விஜய் தந்தை வழி தெலுங்கர் தாய் வழி மலையாளி என்று அவர் கூறியிருப்பது விஜய்யை தமிழர் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்குப் பேரரதிர்ச்சி தரும் தகவலாக அமைந்திருக்கிறது.

Leave a Response