அதிமுக மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனை – ஓபிஎஸ் அழைப்பு

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே தலைமைப் போட்டி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுந்தது.

அப்போதிருந்து இருவரும் தனித்தனியாக இயங்கிவருகிறார்கள்.

அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அப்போது, பாஜக தரப்பிலிருந்து எங்களிடம் தினந்தோறும் பேசுகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னார்.

இந்நிலையில், இன்று ஓபிஎஸ் அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் சென்னை எக்மோர் பாந்தியன் சாலையிலுள்ள அசோகா ஓட்டலில் 11.10.2023 புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

தலைமைக் கழகம்
புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் மாளிகை
அனைத்திந்திய அண்ணா திமுகழகம்

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response