தமிழீழம் வேண்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த கருவிப்போர் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
அந்த இறுதிக்கட்டப் போரில் இலட்சக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் மாயமாக்கப்பட்டனர்.
இந்தப்போரின் 14 ஆவது நினைவு தினம் 18 ஆம் தேதி உலகமெங்கும் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டது.
அந்த வகையில் கனடாவில் வாழும் தமிழர்களும் இந்த தினத்தை அனுசரித்தனர்.
அந்நிகழ்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது…….
முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை உள்ளிட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏராளமானோர் மாயமாகினர், காயம் அடைந்தனர், இடம்பெயர்ந்தனர்.
எங்கள் எண்ணமெல்லாம் இந்தப்போரில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்வோருடன் இருக்கிறது.
பல ஆண்டுகளாக நாடு முழுவதும் நான் சந்தித்த பலர் உள்பட இந்த மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ்-கனடியர்களின் கதைகள், மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவை குறித்து தீர்க்கமான நினைவூட்டலை வழங்குகிறது.
அதனால்தான் மே 18 ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா வாதிடுவதை நிறுத்தாது என்று ஜஸ்டின் ட்ரூடோ பேசினார்.
கனடா பிரதமரின் இந்தப்பேச்சுக்கு உலகத்தமிழர்கள் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.