அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இன்று மாலை அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

அதிமுக சட்டதிட்ட விதி 20 (அ) பிரிவு 2 இல் குறிப்பிட்டபடி, கழகப் பொதுச்செயலாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப கழகப் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் – மார்ச் 18

வேட்பு மனு தாக்கல் நிறைவு – மார்ச் 19 மாலை 3 மணி

மார்ச் 20 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.

21 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்பப் பெறலாம்.

வாக்குப்பதிவு மார்ச் 26 அன்று நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும்.

இந்த அறிவிப்பில் கழகத் துணைப்பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதனும், கழகத் தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வி.செயராமன் ஆகிய இருவரும் தேர்தல் ஆணையாளர் என்று கையெழுத்துப் போட்டுள்ளனர்.

Leave a Response