பெட்ரோல், டீசல் விலை மார்ச் மாதம் 22 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 109 ரூபாய் 34 காசுகளுக்கும், டீசல் 99 ரூபாய் 42 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 18 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் லிட்டர் 100 ரூபாயை கடந்துள்ளது.
அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் யார் நம்மை என்ன செய்துவிட முடியும் என்கிற அதிகார மமதையோடு நாள்தோறும் விலையை ஏற்றிக்கொண்டேயிருக்கிறார் மோடி.
எங்கு போய் முடியுமோ?