இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மோடி படத்துக்கு மலர்தூவும் போராட்டம்

தமிழ்நாடு அரசின் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் 2 ஆவது வாரத்தில் சற்று குறைந்து இருந்தது.ஆனால் அது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் அச்சம் அடையச் செய்யும் அளவுக்கு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தில் பயணிக்கத் தொடங்கியது.

அந்த வகையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து, ரூ.104.83 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து ரூ.100.92 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து விலையேற்றி மக்கள் வயிற்றில் அடிக்கும் மோடிக்கு எதிராக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் மோடியின் படத்துக்கு மலர் தூவி மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் நடத்தப்படுகிறது.

Leave a Response