தமிழீழப்பகுதியில் கால்பதிக்கும் அதானி குழுமம் – இனப்படுகொலைக் குற்றவாளிக்கு இணக்கம்

இலங்கை கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை மேம்பாடு செய்வதற்கும், இயக்குவதற்கும் அதானி குழுமம் சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்தது.

அண்மையில் நடந்த இந்த ஒப்பந்ததைத் தொடர்ந்து இப்போது, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காற்றாலை துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதானி குழுமம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சென்றிருந்த அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி,சிங்கள பிரதமர் ராஜபக்சேவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதானி குழுமம முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் முக்கிய அதிகாரிகள்,தமிழீழப்பகுதியில் மன்னாரின் வடகிழக்கு மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளான சிங்கள அரசியல்வாதிகளுக்கு இணக்கமாக நடந்து அங்கு பல புதிய தொழில் முதலீடுகளை அதானி குழுமம் செய்துவருகிறது.

அதானி குழுமம் மோடிக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால் பிரதிபலனாக இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற மோடி முயல்வார் என்று குற்றச்சாட்டு எழுகிறது.

Leave a Response