தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலாவும் இளவரசியும் 2020 நவம்பரில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினர். சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தவில்லை.
அதனால், சனவரி 27,2021 அன்று சசிகலா விடுதலை செய்யப்பட்டார். சில நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு தமிழ்நாடு திரும்பினார் சசிகலா. அவருடன் இளவரசியும் வந்துவிட்டார்.
ஆனால், சுதாகரன் அபராதம் செலுத்தாததால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அதிகமானது.
இந்நிலையில், அவர் ஏற்கெனவே சிறையில் இருந்த காலத்தைக் கணக்கிட்டு அக்டோபர் 16 அன்று விடுதலையாவார் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒன்பது மாதங்களுக்கு முன் அவர் விடுதலையாகியிருந்தால் பத்துகோடி அபராதம் கட்டியிருக்கவேண்டும். இப்போது ஒன்பது மாதங்களில் சிறையிலிருந்து பத்து கோடி மிச்சப்படுத்திவிட்டார் என்றும் சிறையிலிருந்தப்டியே ஒன்பது மாதங்களில் பத்து கோடி சம்பாதித்துவிட்டார் என்றும் சமூகவலைதளங்களில் பேசப்படுகின்றன.