அமைச்சர் சேகர்பாபு பற்றிப் பரவும் தகவல் – உண்மையா? வதந்தியா?

தமிழ்நாட்டின் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. அமைச்சரானதிலிருந்து தமிழ்நாடு முழுக்கச் சுற்றி துறைசார் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில், அவரைப் பற்றிய ஒரு பரபரப்பான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அது என்னவென்றால்?

அவருக்கு விக்னேஷ், ஜெயசிம்மன் ஆகிய இரு மகன்களும் ஜெயகல்யாணி என்கிற மகளும் உள்ளனர்.

இவர்களில் மகள் ஜெயகல்யாணி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞரைக் காதலித்துக் கரம் பிடித்திருக்கிறார் என்றும் இதனால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது என்றும் பகிரப்பட்டு வருகிறது.மேலும் அந்த இளைஞர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

அதே சமயம், மகளின் காதலை ஏற்றுக் கொண்டு அவர் விரும்பியவரையே மணமுடிக்க அமைச்சர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

அதிகாரபூர்வமற்ற இத்தகவல் சமூக ஊடகங்களில் மட்டும் பரவிவருகிறது.

இது உண்மையா? வதந்தியா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தாம் விளக்கவேண்டும்.

Leave a Response