தமிழக ஆளுநர் ஆகிறார் ரவிசங்கர்பிரசாத்?

ஜூலை 7,2021 அன்று பிரதமர் மோடி,ஒன்றிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தப்பதவியேற்புக்கு முன்பாக ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த ஷர்ஷவர்தன், ரமேஷ்பொக்ரியால், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பதவி விலகினர்.

இவர்களில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய ரவிசங்கர் பிரசாத், தமிழக ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் அதற்காகவே அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் என்றும் சொல்லப்படுகிறது.

இது உண்மையா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Response