காலையில் கோரிக்கை வைத்த அன்புமணி மாலையில் நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்

ஜெர்மனியில் இயங்கிவரும் கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அத்துறையை மூட பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. இதன் காரணமாக கடந்த 2019ல் ஒரு கோடியே 24 லட்சத்து தமிழக அரசு அளிப்பதாக கூறியது. ஆனால் கொரோனா நிதி பற்றாக்குறை மற்றும் தேர்தல் நடத்தை விதிகளால் இந்த தொகையை தமிழக அரசால் அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக கொலோன் பல்கலைக்கழகம் தமிழ் பிரிவை மூட முடிவு செய்தது.அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவுக்கு 1.20 கோடி நிதி உதவி அளித்து உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில்,நேற்று காலையில் (07.07.2021) பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசு, “ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த்துறை நிதி நெருக்கடி காரணமாக செப்டம்பர் மாதத்துடன் மூடப்படும் என்று நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 58 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்த்துறை மூடப்படுவது வேதனையளிக்கிறது!

கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை கற்பிக்கப்படுகின்றன. 50,000 தமிழ் நூல்கள், ஓலைச்சுவடிகள் கொண்ட கொலோன் தமிழ்த்துறை ஐரோப்பாவில் தமிழாராய்ச்சிக்கு கிடைத்த வரம். அது பாதுகாக்கப்பட வேண்டும்!

இந்தத் துறையை பாதுகாக்க 2019-இல் ரூ.1.24 கோடி தமிழக அரசு நிதி வழங்கியது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அது பல்கலைக்கழகத்தைச் சென்றடைவதில் ஏற்பட்ட சிக்கல் தான் தமிழ்த்துறை மூடப்படும் நிலையை உருவாக்கியுள்ளது! கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறையைக் காப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தமிழக அரசு பேச வேண்டும்.

தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்ப் படிப்புகளும், தமிழாராய்ச்சிகளும் அங்கு தொடர்ந்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

என்று பதிவிட்டார்.

திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணியும் இதே கோரிக்கையை வைத்திருந்தார்.

உடனே நேற்று மாலையே, தம்ழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடியை இன்று விடுவித்தேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் நடக்கும் அரசு இது. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ தொடர்ந்து பாடுபடும்!

என்று சொல்லியிருந்தார்.

இதனால் தமிழார்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response