பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில், தினசரி விலை நிர்ணயம் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திக் கொண்டே போகும் நிலை தற்போது இருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.
இந்நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 31 காசு அதிகரித்து ரூ.101.37க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 9 காசு உயர்ந்து ரூ.94.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
இதனால் மக்கள் பெருங்கவலை அடைந்துள்ளனர்.