ஆளுநர் உரை – பழ.நெடுமாறனின் வரவேற்பும் வருத்தமும்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்…..

சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் வேளாண்மைத் துறைக்காக தனியான நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் வழங்கப்படும், தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டுப் படித்த மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அரசுப் பணிகளில் முன்னுரிமைக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

கடந்த பல ஆண்டு காலமாக மூடப்பட்ட அரசுப்பள்ளிகளை மீண்டும் திறப்பதற்குரிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய அரசு முன்வரவில்லை. எனவே, தமிழக அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு முன்வருவது பற்றி எதுவும் அறிவிக்கப்படாததும் வருந்தத் தக்கதாகும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response