ஏப்ரல் ஆறாம்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இந்நிலையில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று புதுச்சேரில் மக்கள்நீதிமய்யம் வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்தார் கமல்ஹாசன்.அப்போது பரப்புரை வாகனத்தில் மைக் வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் வண்டியில் இருந்தவரிடம் கோபமாகப் பேசியதுடன் கையில் இருந்த தனது கட்சி சின்னமான டார்ச் லைட்டையும் வேகமாகத் தூக்கி எறிந்தார்.
இந்தக் காட்சி பதிவாகிவிட்டது. உடனே ஊடகங்களில் அக்காணொலி ஒளிபரப்பானது. தேர்தல் பரப்புரையில் இன்னொரு விஜயகாந்த் என்கிற விமர்சனத்துடன் அக்காணொலி ஒளிபரப்பப்பட்டது.
அதனால் மீண்டும் கோபமான கமல், தன் ஊழியர்கலைக் கடிந்துகொண்டாராம். அதனால், ஒவ்வொரு தொலைக்காட்சியாகத் தொடர்பு கொண்டு அதை ஒளிபரப்பவேண்டாம் என்று கமல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனராம்.
ஆனால், அக்காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.