விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு – வானூரில் வன்னிஅரசு போட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணியில் காங்கிரசு, மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன

இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி,

நாகப்பட்டினம்- ஆளூர் ஷா நாவாஸ்

திருப்போரூர்- எஸ்.எஸ்.பாலாஜி

வானூர் (தனி) – வன்னி அரசு

அரக்கோணம் (தனி)- கவுதம சன்னா

காட்டுமன்னார்கோயில் (தனி)- சிந்தனைச் செல்வன்

செய்யூர் (தனி) – பனையூர் பாபு

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Response