அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்டனர். அதில் அதிமுக தவிர மற்ற கட்சிகள் தோல்வியைத் தழுவின.
இப்போது சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சு வார்த்தை முடிவடையாமல் நீடித்தது. திடீரென தேமுதிக அதிமுக கூட்டணி முறிந்தது என அறிவித்தது.
அதன்பின், கமல் கட்சியுடன் கூட்டணிப் பேச்சு நடந்ததாகச் சொல்லப்பட்டது. அதுவும் ஒரு கட்டத்தில் முறிந்துவிட அதன்பின் டிடிவி.தினகரனின் அமமுகவுடன் கூட்டணிப் பேச்சு நடந்தது.
இந்நிலையில் இன்று மாலை அதிகாரபூர்வமாக இரு கட்சியினரும் சந்தித்து உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அதன்படி அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வட, மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை தேமுதிகவும்,. தென் கிழக்கு டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை அமமுகவும் பிரித்துக்கொண்டுள்ளன.
இதன் மூலம் டிடிவி தினகரன் தலைமையை தேமுதிக ஏற்றுக்கொண்டுள்ளது.
அமமுகவிடம் 26 தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அமமுக வேட்பாளர்களைத் திரும்பப் பெற வைத்து தேமுதிகவுக்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர். அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 60 இடங்களுக்கான பட்டியல் வருமாறு:
1.கும்மிடிப்பூண்டி
2.திருத்தணி
3.ஆவடி
4.வில்லிவாக்கம்
5.திருவிக நகர் (தனி)
6 எழும்பூர் (தனி)
7.விருகம்பாக்கம்
8.சோழிங்கநல்லூர்
9.பல்லாவரம்
10. செய்யூர் (தனி)
11.மதுராந்தகம் (தனி)
12.கே.வி.குப்பம் (தனி)
13.ஊத்தங்கரை (தனி)
14.வேப்பனஹள்ளி
15.பாலக்கோடு
16.பென்னாகரம்
17.செங்கம் (தனி)
18.கலசப்பாக்கம்
19.ஆரணி
20.மயிலம்
21.திண்டிவனம் (தனி)
22.வானூர் (தனி)
23.திருக்கோயிலூர்
24.கள்ளக்குறிச்சி (தனி)
25.ஏற்காடு (எஸ்டி)
26.மேட்டூர்
27.சேலம் மேற்கு
28.நாமக்கல்
29.குமாரபாளையம்
30.பெருந்துறை
31.பவானிசாகர் (தனி)
32.கூடலூர் (தனி)
33.அவிநாசி (தனி)
34.திருப்பூர் வடக்கு
35.வால்பாறை (தனி)
36.ஒட்டன்சத்திரம்
37.நிலக்கோட்டை (தனி)
38.கரூர்
39.கிருஷ்ணராயபுரம் (தனி)
40.மணப்பாறை
41.திருவெறும்பூர்
42.முசிறி
43.பெரம்பலூர் (தனி)
44.திட்டக்குடி (தனி)
45.விருத்தாசலம்
46.பண்ருட்டி
47.கடலூர்
48.கீழ்வேளூர் (தனி)
49.பேராவூரணி
50.புதுக்கோட்டை
51.சோழவந்தான் (தனி)
52.மதுரை மேற்கு
53.அருப்புக்கோட்டை
54.பரமக்குடி (தனி)
55.தூத்துக்குடி
56.ஒட்டப்பிடாரம் (தனி)
57.ஆலங்குளம்
58.இராதாபுரம்
59.குளச்சல்
60.விளவங்கோடு