அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஆறு தொகுதிகள் – ஜி.கே.வாசன் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வாசன் கூறுகையில், “அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதி என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறோம்.

1.திருவிக நகர்,
2.பட்டுக்கோட்டை,
3.லால்குடி,
4.ஈரோடு கிழக்கு,
5.தூத்துக்குடி,
6.கிள்ளியூர்

ஆகிய 6 தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது. எங்கள் கட்சியின் சைக்கிள் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்” என்றார். லால்குடி தொகுதியில் ஏற்கெனவே அதிமுக வேட்பாளராக ராஜராம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தத் தொகுதி தற்போது தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response