கமல் கட்சி போட்டியிடும் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான ‘மக்களின் முதல் கூட்டணியில்’ சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இருக்கின்றன.

இக்கூட்டணியில், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதம் உள்ள 154 தொகுதிகள் மக்கள் நீதி மய்யம் வசம் உள்ளது. இதற்கிடையே மக்கள் நீதி மய்யத்துடன், எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1.மதுரவாயல்-பத்மபிரியா, 2.மாதவரம்-ரமேஷ்கொண்டலசாமி, 3.ஆர்.கே.நகர்-பாசில், 4.பெரம்பூர்-பொன்னுசாமி, 5.வில்லிவாக்கம்-முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, 6.எழும்பூர்-பிரியதர்சினி, 7.அண்ணாநகர்-அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், 8.விருகம்பாக்கம்-பாடல் ஆசிரியரும், கவிஞருமான சினேகன், 9.சைதாப்பேட்டை-சினேகா மோகன்ஸ்தாஸ், 10.பல்லாவரம்- செந்தில் ஆறுமுகம் (சட்ட பஞ்சாயத்து இயக்கம்),

11.தாம்பரம்-சிவ இளங்கோ, 12.திருப்போரூர்-லாவண்யா, 13.காஞ்சீபுரம்-கோபிநாத், 14.ஓசூர்-மசூத், 15.பாலக்கோடு-ராஜசேகர், 16.பென்னாகரம்-ஷகீலா, 17.திருவண்ணாமலை-அருள், 18.செய்யாறு-மயில்வாகணன், 19.ஓமலூர்-சீனிவாசன், 20.மேட்டூர்-அனுசியா, 21.நாமக்கல்-ஆதாம் பரூக், 22.குமாரப்பாளையம்-காமராஜ், 23.ஈரோடு கிழக்கு-ராஜ்குமார், 24.ஈரோடு மேற்கு-துரை சேவகன், 25.மொடக்குறிச்சி-ஆனந்தம் ராஜேஷ், 26.பெருந்துறை-நந்தகுமார், 27.உதகமண்டலம்-சுரேஷ்குமார்,

28.குன்னூர்-ராஜ்குமார், 29.கூடலூர்-பாபு, 30.மேட்டுப்பாளையம்-லட்சுமி, 31.அவினாசி-வெங்கடேஸ்வரன், 32.திருப்பூர் வடக்கு-சிவபாலன், 33.திருப்பூர் தெற்கு-அனுஷ்யா ரவி, 24.பல்லடம்-மயில்சாமி, 35.சூலூர்-ரெங்கநாதன், 36.கிணத்துக்கடவு- சிவா, 37.வால்பாறை-செந்தில்ராஜ், 38.மடத்துக்குளம்-குமரேசன், 39.பழனி-பூவேந்தன், 40.திண்டுக்கல்-ராஜேந்திரன், 41.அரவக்குறிச்சி-முகமது அனீப் சகீல், 42.திருச்சி கிழக்கு-வீர சக்தி, 43.திருவெறும்பூர்-முருகானந்தம்,

44.முசிறி-கோகுல், 45.துறையூர்-யுவராஜ், 46.குன்னம்-சாதிக் பாட்ஷா, 47.பண்ருட்டி-ஜெயலானி, 48.மயிலாடுதுறை-ரவிச்சந்திரன், 49.நாகப்பட்டினம்-அனாஸ், 50.கீழ்வேளூர்-சிந்து, 51.பட்டுக்கோட்டை-சதாசிவம், 52.விராலிமலை-சரவணன் ராமதாஸ், 53.புதுக்கோட்டை-மூர்த்தி, 54.திருமயம்-திருமேனி, 55.ஆலங்குடி-வைரவன், 56.காரைக்குடி-ராஜ்குமார், 57.மேலூர்-கதிரேசன்,

58.சோழவந்தான்-யோகநாதன், 59.மதுரை மேற்கு-முனியசாமி, 60.திருமங்கலம்-ராம்குமார், 61.ஆண்டிப்பட்டி-குணசேகரன், 62.போடிநாயக்கனூர்-கணேஷ்குமார், 63.கம்பம்-வேத வெங்கடேஷ், 64.ஸ்ரீவில்லிபுத்தூர்-குருவையா, 65.அருப்புக்கோட்டை-உமா தேவி, 66.பரமக்குடி-கருப்பு ராஜ், 67.கோவில்பட்டி-கதிரவன், 68.கன்னியாகுமரி-பி.டி.செல்வக்குமார், 69.நாகர்கோவில்-மரியா ஜேக்கப் ஸ்டான்லி, 70.குளச்சல்-லதீஸ் மேரி.

Leave a Response