இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் கமல் – விவரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் வேகமாகத் தயாராகிவருகின்றன.

2018 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியும் இத்தேர்தலில் போட்டியிடத் தீவிரம் காட்டிவருகிறது.

மக்கள் நீதி மய்யம் தனியாகப் போட்டியிடுகிறதா? அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறதா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் கமல்ஹாசன், தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் அதுவும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அவர், சென்னைக்கு அருகிலுள்ள ஆலந்தூர் தொகுதி கோவை மாவட்டத்திலுள்ள கோவை தெற்கு தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார் என்று சொல்கிறார்கள்.

மார்ச் 7 ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Response