சசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அதற்கான தனிமைப்படுத்தல் விதிமுறையை அவர் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 27 ஆம் தேதி அவர் விடுதலை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தாலும், 7 அல்லது 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியுள்ளதால், 27 ஆம் தேதி விடுதலைக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று சந்தேகம் எழுந்தது.

மற்றொரு புறம், விடுதலை தேதியைக் கடந்து, மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என்றால், சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவாரா? அல்லது மருத்துவமனையில் இருந்தப்படியே விடுதலை செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

இவற்றிற்கெல்லாம் விடையளிக்கும் விதமாக இன்று மாலை டிடிவி.தினகரன் வெளீயிட்டுள்ள அறிவிப்பில்…

நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

இதன்மூலம் நாளை மறுநாள் அவர் விடுதலை செய்யப்பட்டுவிடுவார் என்பதும் விடுதலைக்குப் பிறகும் பெங்களூரு மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறவிருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.

Leave a Response