நவம்பர் 1 தமிழ்நாடு பிறந்தநாள் – பழ.நெடுமாறன் வேண்டுகோள்

நவம்பர் முதல்நாள் – தமிழ்நாடு பிறந்த நாளைக் கொண்டாடுக என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்
பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழ்நாடு பிறந்த நவம்பர் முதல் நாளை ஆண்டு தோறும் கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடி வந்திருக்கிறோம். ஆனால் இவ்வாண்டு அவ்வாறு கொண்டாட முடியாத வகையில் கொரோனா தொற்று நோய்ச் சூழ்நிலை உள்ளது.

எனினும் தமிழ்நாடு பிறந்த திருநாளை நவம்பர் முதல் நாள் அன்று கொண்டாடும் வகையில் தங்களின் வீட்டிற்கு முன்னர் தமிழ்நாட்டின் வரைபடத்தையும் “தமிழ் வாழ்க”, “தமிழ்நாடு சிறந்தோங்குக” என்னும் வாசகங்களையும் கோலமாக இட்டும் இனிப்பு வழங்கியும் கொண்டாடும்படி தமிழ் நாட்டு மக்களை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response