அதிமுக எம் எல் ஏ வுக்கு அமைச்சர் கொலைமிரட்டல் காங்கிரசு எம்பி ஆதரவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளரும் பால்வளத்துறை அமைச்சருமான இராஜேந்திர பாலாஜியின் பெயர் மற்றும் புகைப்படம் புறக்கணிப்பட்டதால், அ.தி.மு.க தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே, அந்தக் கூட்டத்தில் பேசிய சாத்தூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், தமிழக பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி கூலிப்படையை ஏவி தன்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

அதைத் தொடர்ந்து இன்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதும் காங்கிரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு ஆதரவாகப் பேசியிருப்பதும் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response