எனக்கு எம்.எல்.ஏ பதவி கூட வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள் – செயற்குழுக் கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்

இன்று நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டார்களாம்.

எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, இன்னும் எவ்வளவு நாட்களுக்கு முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிக்காமல் இருப்பீர்கள். உளவுத்துறை தகவல்கள் நமக்குச் சாதகமாக இல்லை. எனவே முன்கூட்டியே அந்த அறிவிப்பை வெளியிட்டு வேகமாக வேலைகளைத் தொடங்கவேண்டும்.

நான் எந்தப் பதவியையும் தேடிப்போனதில்லை. எல்லாப் பதவிகளும் என்னைத் தேடி வந்தவைதான்.எம்.பி பதவி வேண்டும் அமைச்சர் பதவி வேண்டும் என்று யார்ரிடமும் கேட்டதில்லை. என்னை முதல்வராக அறிவிக்க விருப்பமில்லையெனில் விட்டுவிடுங்கள், எனக்கு எம் எல் ஏ பதவி கூட வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

என்று கோபமாகப் பேசினாராம்.

தொடக்கத்தில் எழுதி வைத்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பிறகு, அம்மா மறைவுக்குச் சில நாட்கள் முன்பு கூட என்னை முதல்வராகச் சொல்லிக் கேட்டார்கள். அங்கு 16 பவர்செண்டர் இருக்கின்றன, நாம் ஒரு விசயம் செய்தால் நான்கு பேருக்குப் பிடித்தால் எட்டுப்பேருக்குப் பிடிக்காமல் போகும் என்பதால் மறுத்தேன்.

அதன்பின் தர்மயுத்தம் செய்தேன் அதன்பின் நடந்த சமரசத்தில் இரண்டரை ஆண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பார் அதன்பின் இரண்டரை ஆண்டுகள் என்னை இருக்கச் சொன்னார்கள். ஆனால் நான் அதையும் மறுத்தேன்.

எனவே இப்போது என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று பேசினாராம்.

இப்படி இருவரும் போட்டி போட்டுப் பேசியதால் உடன்பாடு எட்டப்படவில்லை என்கிறார்கள்.

Leave a Response