திமுகவில் தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், 1997 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். தற்போது திமுக சார்பில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.
இந்நிலையில், கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர் திமுவை விட்டு விலகக்காரணமாக, சென்னை திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார்.அதன் காரணமாகவே அவர் விலகுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெ.அன்பழகன் மறைவையொட்டி,அண்மையில், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இளைஞர் அணியைச் சேர்ந்த சிற்றரசு நியமனம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உண்மை இதுதான் என்று உயர்மட்டத்தில் கிசுகிசுக்கப்படும் தகவல் என்ன தெரியுமா? அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் உதயநிதி போட்டியிடுவது முடிவாகிவிட்டதாகவும் அதேநேரம், கு.க.செல்வம் போட்டியிட வேறு தொகுதியும் ஒதுக்கப்படாது என்பதால்தான் அவர் கட்சி மாறுகிறார் என்றும் அதற்காக அவருக்குப் பெரும்தொகை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.