தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி?

கொரோனா கிருமி காரணமாக தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொற்று அதிகமாகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அண்மையில், மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ள மும்பையின் தாராவி பகுதியிலேயே கொரோனா தொற்று வேகமாகப் பரவாமல் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் சென்னை நிலவரம் கவலையளிக்கிறது. என்ன செய்து கொண்டிருக்கிரீர்கள்? என்று காட்டமாக மத்திய அரசு தமிழக அரசிடம் கேள்வியெழுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

அதோடு, உங்களால் திறமையாகச் செயல்பட முடியாவிட்டால் விலகிக் கொள்ளுங்கள், நாங்கள் ஆளுநரை வைத்து நிர்வாகம் செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறோம் என்றும் சொல்லப்பட்டதாம்.

இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சரவையினர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்களாம்.

இந்நிகழ்வால்,தமிழக மக்கள் மீதான அக்கறையில் மத்திய அரசு இவ்வளவு கடுமை காட்டியிருக்கிறது என்று பாஜக தரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கும் அதேசமயம், கொரோனா தொற்று விவகாரத்தைப் பயன்படுத்தி கொல்லைப்புற வழியாகத் தமிழக அரசைக் கைப்பற்ற பாஜக முயல்கிறது என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

Leave a Response