12 நாட்கள் முழு ஊரடங்கு – தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு

மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மற்றும் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த முழுமுடக்கக் காலத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.

சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்தத்தடையும் இல்லை.

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம்போல் இயங்கும்.

வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் 4 மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்.

சென்னையில் நாளை முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்.

ஆகிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Response