1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி – பாஜகவினர் வழங்கினர்

கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு தொடர்கிறது.

இதனால் வெகுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு உதவும் வகையில்,
PMJKYPPA பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா பிரச்சார இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜெய்கணேஷ் ஆலோசனையின்படி காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியன மாவட்ட நிர்வாகி கண்ணன் தலைமையில் வழங்கும் நிகழ்வு கேளம்பாக்கம் மாவட்ட அலுவலகத்தில் துவங்கப்பட்டது .

இதன் மூலம் கேளம்பாக்கம், புதுப்பாக்கம் சாவடி சிறுதாவூர் , மடத்தூர், திருப்போரூர் , பையனூர் , காரணை , தட்சிணாபுரம், குன்னபட்டு , வளர்குன்றம் அனுமந்தபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் சுமார் 100 கிராமங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் ஏற்பாடும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தங்கள் பகுதியில் கபசுர நீர் கொடுக்க விரும்பும் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response