ஊரெல்லாம் கேக்கறீங்களே? நீங்க எவ்வளவு கொடுத்தீங்க? – எச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன?

கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி நாடு முழுமைக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

இதையொட்டி பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் நிதிகேட்டு நிற்கிறார். பாஜகட்சியும் மக்களிடம் நிதி வசூல் செய்ய முன்வந்திருக்கிறது.

இது அறத்திற்குப் புறம்பான‌ அநீதிச்செயல் என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில், பாஜகவின் தேசீயச்செயலாளர் எச்.ராஜா தன்னுடைய ட்விட்டரில்,

பாரத பிரதமர் மற்றும் அகில பாரத தலைவர் அவர்களின் கோரிக்கையை ஏற்போம்!
நம்மால் முடிந்த அளவு நிதி பங்களிப்போம்!
PM CARES நிதிக்கு பங்களிக்க …

அன்புடேயீர்
தேசியத் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு பாஜகவின் உறுப்பினரும் கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு உதவிட பிரதமர் நிதிக்கு தலா 100/- ரூபாய் அளிப்போம். மேலும் 10 நபர்களை அளிக்கச் செய்வோம்

ஆகிய ட்வீட்களை வெளியிட்டிருந்தார்.

இதற்கு எதிர்வினையாக திமுகவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரொனா நிவாரண நிதிக்கு நீங்க எவ்வளவு கொடுத்தீர்கள்? என்று ட்விட்டரில் கேட்டிருக்கிறார்.

இதனால் கோபமான எச்.ராஜா சம்பந்தப்பட்ட பெண் தன் ட்வீட்களைப் பார்க்கமுடியாதபடிக்கு தடை செய்துவிட்டாராம்.

அவர் த்டை செய்த படத்தை வெளியிட்டு, நான் அப்படி என்ன பெருசா தப்பா கேட்டுட்டன் கொரோனா நிவாரண நிதியா நீங்க எவ்ளோ குடுத்தீங்கன்னு தான கேட்டன் அதுக்கு போய் இந்த மனுஷன்
@HRajaBJP என்ன block பண்ணிட்டாரு

என்று பதிவிட்டிருக்கிறார்.

இப்பதிவில் அப்பெண்ணின் கேள்விக்கு ஆதரவாகவும் எச்.ராஜாவுக்கு எதிராகவும் ஏராளமானோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Response