சூரிய கிரகணம் – மாவட்டந்தோறும் தெரியும் நேரம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தொடங்கியது. அமாவாசை அன்று நிலா மறைக்கும் போது சூரியன் நெருப்பு வளையமாகத் தென்பட்டால், அது வளைய சூரிய கிரகணம் ஆகும்.

இந்தியாவில் காலை 08.03 மணி முதல் காலை 11.19 மணி வரை சூரிய கிரகணம் தெரியும்.

சென்னையில் வளைய சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே காலை 09. 34 மணிக்குத் தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சேலம் நாகர்கோயில் 09.31, புதுச்சேரியில் 09.34, மண்டபத்தில் 09.33 மணிக்கு பகுதி கிரகணம் தென்படும். மேலும் கோவையில் காலை 09.27- 09.30; திருப்பூரில் 09.28- 09.31; கரூர், திண்டுக்கல்லி 09.29- 09.32 மணி வரை தெரியும். மதுரையில் 09.31- 09.32; காரைக்குடி, சிவகங்கை, திருச்சியில் காலை 09.31- 09.33 மணி வரை முழு வளைய சூரிய கிரகணம் தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

முழு வளைய சூரிய கிரகணத்தின்போது சூரிய ஒளியை சந்திரன் 93 சதவீதம் அளவுக்கு மறைக்கும். தமிழகத்தில் முதலில் ஊட்டியில் முழு வளைய சூரிய கிரகணம் காலை 09.26 மணிக்கு தொடங்கி 09.29 மணி வரை நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது சூரியக் கண்ணாடி வழியாக பார்க்க அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Response