அயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இவ்வழக்கில் நேற்று ( நவம்பர் 9,2019) தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கி இருப்பதாக தெரிவித்தார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

இத்தீர்ப்பில், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில்,

ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வால் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்பது இதில் குறிப்பிடப்படவில்லை. இப்படி நீதிபதியின் பெயர் மறைக்கப்படுவது இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் நடந்திராத ஒன்றாகும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையொட்டி, மோடி ஆட்சியில் சட்டப்படி ஏதாவது நடந்தால்தான் ஆச்சரியம் என்று பல்ரும் கருத்து சொல்கிறார்கள்.

Leave a Response