அசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு

அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம்.

இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார். தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் படம் பார்த்துள்ளார்.

படத்தைப் பார்த்துவிட்டு முகநூலில் அவர் இட்டிருக்கும் பதிவு…

அசுரன் #Asuran – படம் மட்டுமல்ல பாடம்!

பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!

கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response