காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்மக்களின் கோரிக்கை – உலகெங்கும் வரவேற்பு

பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பல்வந்த் சிங்.

இவர் மீது தடா சட்டம் போடப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது பல்வந்த்சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக, தான் பெருமைப்படுவதாகவும் கூறினார்.

அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பல்வந்த் சிங் கருணை மனு போடவில்லை. இருந்தும் அன்றைய முதலமைச்சர் பாதல் மனுவிற்கு அமைய அவரது தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கொல்லப்பட்ட முதலமைச்சர் பியாந்த் சிங் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர். இப்போது முதலமைச்சராக இருப்பவரும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

இருப்பினும் இப்போதைய முதலமைச்சர் குருநானக்கின் 550 ஆவது பிறந்தநாளை ஒட்டி 550 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதில் பல்வந்த் சிங் ஒருவர். இவரை விடுதலை செய்ய முதலமைச்சர் அனுப்பிய அறிக்கைக்கு ஒரு வாரத்தில் சம்மதம் தெரிவித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

ஆனால் பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை என்று விசாரணை செய்த அதிகாரி கூறினார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என நீதிபதி கூறினார்.

தமிழ்நாடு அரசு விடுதலை செயய்லாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த பின்பு தமிழக முதலமைச்சர் ஜெயா அம்மையார் 2014 இல் பேரறிவாளன் உட்பட எழுவரை விடுதலை செய்வதாக தீர்மானம் நிறைவேற்றினார்.

ஆனால் மத்திய அரசு உடனே உச்சநீதிமன்றம் சென்று தடுத்தது. அதன் பின்னரும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என உச்சநீதிழமன்றம் மீண்டும் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து மீண்டும் தமிழக அரசு பேரறிவாளன் உட்பட எழுவரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பியது.

ஆனால் அது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசும் ஆளுநரும் வேண்டும் என்றே பல மாதங்களாக தாமதம் செய்கிறார்கள்.

பலவந்த் சிங்கிற்கு ஒரு வாரத்தில் சம்மதம் தெரிவித்த மத்திய அரசு பேரறிவாளனுக்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறது.

இதேபோன்று நடிகர் சஞ்சய் தத்திற்கு மராட்டிய மாநில அரசு தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்தபோதும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் அளித்தது.

இந்தியா ஜனநாக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.

ஆனால் சஞ்சசத் தத் பல்வந்த் சிங் போன்றவர்களுக்கு ஒரு நியாயம் பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயமும் இந்திய அரசு வழங்குகிறது.

காந்தியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதுமுள்ள பல்வேறு சிறையாளிகளை மைய அரசு விடுதலை செய்ய இருப்பதாகச் செய்திகள் ( The Hindu dated 29.09.2019 ) தெரிவிக்கின்றன.

அதே போல், சீக்கிய குரு குருநானக் தேவ் அவர்களின் 550 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பஞ்சாப் தீவிரவாதிகள் எட்டுப் பேரை விடுதலை செய்வதாக உள்துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.

ஆனால் ஏறக்குறைய 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்கள் வலியுறுத்தியும், அவர்களது விடுதலை கானல் நீராகக் கரைந்து போய்க் கொண்டிருக்கிறது.

எனவே குறைந்த பட்சம் இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டாவது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மக்களின் கோரிக்கையை அரசு கட்டாயம் ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இன்று சமூகவலைதளங்களில்,

#7தமிழர்களைவிடுதலைசெய்க!
#Release7tamils

ஆகிய குறிச்சொற்களைப் பயன்படுத்தி பதிவுகள் இட்டு வருகிறார்கள்.

இதற்கு தமிழக மக்கள் மத்தியில் மட்டுமின்றி உலகத்தமிழர்கள் மத்தியிலும் ஆதரவு கிடைத்துவருகிறது.

Leave a Response