திலீபன் நினைவு நிகழ்வில் அட்டூழியம் – யாழ் தமிழர்கள் கோபம்

தியாகதீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாள் இன்று.

அவருடைய நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்பாட்டுக்குழுவினரால் செய்யப்பட்டு பூர்த்தியடைந்த நிலையில் நேற்று இரவு திடீரென வந்த யாழ் மாநகர துணை மேயர் ஈசனால் அங்கு திலீபன் அண்ணாவின் கட்டவுட் ஒன்று வைக்கப்பட்டது.

அதில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் என்றே பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

பின்னர் காலையில் திடீரென மீண்டும் அவ்விடத்திற்கு வந்த சிலர் மேயரின் உத்தரவு என்று சொல்லி லெப். கேணல் என்பதை கறுப்புத்துணியால் மறைத்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெறும் போது தூபிக்கு நேரே முன்னுக்கு சிறிலங்கா தேசிய கீதம் இசைத்து நிகழ்வை தொடக்கி வைத்த சிங்களர் ஆனோல்ட்டின் அவமதிப்பு செயற்பாடுகள் இப்போதும் தொடர்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இச்செயலானது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response