தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ஆம் ஆண்டு
நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி பேசியதாவது:-
எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. தெலுங்கனின் விழாவை தெலுங்குகாரன்தான் கொண்டாடுகிறான்.
இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண்
என்று பேசியிருந்தார்.
இதற்குக் கடும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று…..
இருப்பது தமிழ்நாட்டில் பிழைப்பதும் தமிழ்நாட்டில்தான்.
தின்பதும் தமிழன் சோற்றையே.ஆனால் பேசுவது தமிழனுக்கு எதிராக?
தமிழன் என்பதெல்லாம் வேஸ்ட். நான் தெலுங்கள் என்று நடிகர் ராதாரவி திமிராக பேசியுள்ளார்.
அதுமட்டுமல்ல தெலுங்கர்களினால்தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளது என்று வேற பேசியுள்ளார்.
அப்படியென்றால் தெலுங்கர்களின் மாநிலமான ஆந்திராவும் தெலுங்கானாவும் தமிழ்நாட்டைவிட பின்தங்கிய மாநிலமாமாக இருப்பது ஏன் என்பதற்கு ராதாரவி பதில் தருவாரா?
இருப்பது தமிழ்நாட்டில் தின்பது தமிழ்நாட்டு சோற்றை. பிழைப்பதும்கூட தமிழ்நாட்டில்தான். ஆனால் நன்றி மறந்து தமிழனுக்கு எதிராக பேசுகிறார் ராதாரவி.
ஆனாலும் ராதாரவியை ஒருவிடயத்தில் பாராட்ட வேண்டும். தான் ஒரு தெலுங்கன் என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை தன்னை தமிழன் என்று கூறும் குருமூர்த்தி துக்ளக் வாசகர்களில் 90% வீதமானோர் இந்தி படிக்க விரும்புவதாக கூறுகிறார்.
அப்படியென்றால் “துக்ளக்” இதழை இந்தியில் அடித்து வெளியிட வேண்டிதுதானே?
புத்தகம் அடிப்பது தமிழில். விற்றுப் பிழைப்பது தமிழ்நாட்டில். ஆனால் வக்காலத்து வாங்குவது இந்தி மொழிக்கு.
கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னட மொழிக்கு எதிராக யாரும் இப்படி கூறமுடியுமா?
அல்லது ஆந்திராவில் இருந்துகொண்டு தெலுங்கருக்கு எதிராக யாரும் இப்படி கூறமுடியுமா?
முடியாது. நிச்சயமாக முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யாரும் தமிழனுக்கு எதிராக கூறமுடியும்.
ஏன் இப்படி தமிழனுக்கு எதிராக கூறுகின்றீர்கள் என்று நாம் கேட்டால் எம்மை “இனவாதிகள்” என்கிறார்கள்.
என்னே கொடுமை இது?
தமிழா! எப்போது இன உணர்வு கொள்ளப் போகிறாய்?
– பாலன் சந்திரன்