அமித்சா முயற்சியின் விளைவு – பழ.நெடுமாறன் அறிக்கை

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி விளங்க வேண்டும் என
இந்திய உள்துறை அமைச்சர் அமித்சாவின் அறிவிப்பு
வியப்பை அளிக்கவில்லை.

பாசக -வின் அடிப்படைக் கொள்கை அது என்பதை உணராமல்
பல்வேறு காலகட்டங்களில் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து வலிமைப்படுத்தி ஆட்சியில் அமரவைத்த கட்சிகள் அனைத்தும் இதற்குப் பொறுப்பாகும்.

இப்போது எதிர்ப்புக் குரலை எழுப்புவது தங்களின் கடந்த கால தவறை மறைப்பதற்கான முயற்சியேயாகும்.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் நீடிக்கும் என நேரு அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு லால்பகதூர் பிரதமராக இருந்த காலத்தில் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டு விட்டது.

இதை மீறுவதற்கு அமித்சா செய்யும் முயற்சி நாட்டை சிதறடித்துவிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response