மோடிக்கு முட்டுக்கொடுக்கும் தமிழிசை முகத்திலறையும் கன்னட பாஜக

ஜூன் 16 அன்று கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குநர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன்,

அதன்பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது,

அரசியல் கட்சிகள் இதனால் பெரிய ஆபத்து என்பது போன்று போராட்டங்களை அறிவிப்பது இயற்கையாக மக்களோடு அரசு நடத்தும் கலந்துரையாடல் முழுமையாக முற்றுப் பெறாதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

மின்சாரம் நிச்சயமாக வேண்டும் இன்னைக்கு பார்த்தீர்கள் என்றால் 1000 மெகா வாட் இதில் பெரும் பகுதி நமக்கு மின்சாரமாகக் கிடைக்கிறது. இந்தக் கழிவுகளை ஒன்றும் செய்யாதீர்கள் உடனடியாக நிறுத்துங்கள் என்றால் எங்கிருந்து மின்சாரம் கிடைக்கும்? ஆகவே ஆக்கப்பூர்வாமாக நேர்மறையான சித்தனைகளை நாம் கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து என்றார்.

இந்நிலையில் கர்நாடக பாஜக கட்சி, கோலார் தங்க வயலில் அணுக்கழிவு மையம் அமைப்பதைத் தடுப்போம் என்று சொல்லியிருக்கிறது.

அணுக்கழிவை தமிழகத்தில் வைக்க விடமாட்டோம் என்று சொன்னால் நாங்கள் தேசதுரோகிகள், அணுக்கழிவுகளை அனுமதிக்கமாட்டோம் என்று சொல்லும் கர்நாடகா பாஜகவை என்ன சொல்வீர்கள்? என்று தமிழிசைக்குப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பதில்தான் இல்லை.

Leave a Response