திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு… வேகமாகப் பரவும் வலைதளப் பகிர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், மக்கள் நீதி மய்யத்தின் மக்களவைத் தொகுதி வேட்பாளர் முனியசாமி மற்றும் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் சுந்தரராஜன் ஆகியோரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல் ஏப்ரல் 13 சனிக்கிழமை பரப்புரை செய்தார்.

அப்போது கமல், இன்றைக்கு அவர்கள் நாங்கள் தான் முதலில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம், அதனால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்கின்றனர். நல்ல ஐடியா. இதனை எங்கள் வீட்டுப் பெண் இறந்து போவதற்கு முன்பே செய்திருக்கலாமே. நீட் தேர்வு வேண்டாம் என அதனை எடுத்து விட்டால் தமிழகம் முன்னேறிடுமா?

என்று பேசினார்.

இதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

முகநூலில் கார்த்திகேய சிவசேனாபதி எழுதியுள்ள பதிவில்…..

திரு. கமலஹாசன் அவர்களுக்கு,

அன்புடன் நான் எழுதும் கடிதமே !!

“நம்மவர், நாங்கள் இங்குச் சவுக்கியமே நீங்கள் அங்குச் சவுக்கியமா ??!!”

இதுவரை நான் உங்களுக்கு மடல் வரைந்தது இல்லை. பல்வேறு காரணங்களால் இப்பொழுது எழுத வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்.

தெள்ளத்தெளிவாக NEET ற்கு ஆதரவு வழங்கி உள்ளீர்கள்.

“NEET எதிர்த்தால் தமிழகம் முன்னேறி விடுமா என்று ??”

தாங்கள் பல்வேறு மாநிலங்கள், பல நாடுகளுக்குச் சென்றவர். வேறு எதாவது மாநிலத்தில் தமிழகத்தில் இருக்கக் கூடிய சமூக நீதி, அனைவரும் மருத்துவர் ஆகும் வாய்ப்பு, அரசு மருத்துவமனையில் கட்டமைப்பு, சுகாதாரத்துறை, என மேம்பட்டு உள்ளதா ?

ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார மையம் தெற்கு ஆசியாவிலேயே, தமிழகத்தில் தான் சாமானியனுக்கு மருத்துவ வசதி சிறப்பாக கிடைக்கப் பெறுகின்றன!!!
என உறுதி செய்து உள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் NEET அல்லாத நமது கல்வி முறை தான். ஆதலால் நீங்கள் எதற்காக NEET ஆதரவாக இருக்கின்றீர்கள் என விளங்கவில்லை ??!!!

இருந்தாலும் உங்களைத் தொடர்ந்து ஒரு நல்ல கலைஞனாக உங்கள் மீது என்று மாறாத பற்று கொண்ட உங்கள் ரசிகனாக தங்களின் அடுத்த படத்திற்காகக் காத்து இருக்கும்,

அன்புள்ள
கார்த்திகேய சிவசேனாபதி
14 -04 -2019

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

அதற்கு ஆதரவாக நிறைய கருத்துகள் வருகின்றன. அவற்றில் ஒன்று…

என்னங்க கமல் சார்…நேற்றுதான் அனிதாவுக்காக அவ்வளவு இறக்கப்பட்டீங்க, இப்ப அப்படியே அந்தர் பல்டி அடிக்கிறீங்களே….
இடையில என்ன நடந்திருக்கும்….🤔

ஒ…அடடே…அனிதாவுக்குகாக இறக்கப்படுவதுபோல் நடித்துவிட்டு சைக்கிள் gapல நேற்றுதான் அனிதாவின் குடும்ப வாக்குகளை ட்ரிக்ஸ்சா கேட்டுப்பாத்தீங்க, ஆனால், அனிதாவின் சகோதரர் தங்கள் வாக்கு முழுவதும் திமுக கூட்டணிக்கே என்று தெரிவித்துவிட்டதால், சீ..சீ..இந்த பழம் புளிக்கிறது என்று பல்டி அடிக்கிறீர்கள் போலிருக்கிறது.
பலே ஆள் சார் நீங்க…
நீட் இல்லாமலேயே தமிழ்நாடு ஏற்கனவே வளர்ச்சியடைந்துதான் இருக்கின்றது சார்..
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி நீட்டுக்கு முன்னாடியே வந்ததுதான்.
Doctor Vs Patient ratio இல், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சிறந்து விளங்குகிறது என்பது புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மைகள்.
“நீட்” தேர்வை இரத்து செய்துவிட்டால் மட்டும்”…😉😉பாஜக கொண்டையை மறைங்க பாஸ்.

Leave a Response