உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்து பா.ஜ.க மோடி அரசைக்கண்டித்து 06.02.2019 (புதன்கிழமை) அன்று ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இது தொடர்பாக புஇமு அமைப்பினர் கூறியதாவது….
அனுமதி மறுப்புக்கு வழக்கம்போல் சில சப்பைக் காரணங்களைக் கூறியுள்ளது காவல்துறை.
மேலும் நாம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிரானதாக உள்ளதாம்.
தமக்கு எதிராக எதிர்க்கருத்து என்பதே இருக்கக்கூடாது என்ற பாஜக வின் பாசிச மனோநிலையையும், பாஜகவின் பார்ப்பன ஆதரவையும் அப்படியே ஈரோடு மாவட்டக் காவல்துறை குறைந்தபட்ச சனநாயகம் கூட இல்லாமல் கடைப்பிடிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
எழுத்துரிமை,பேச்சுரிமை,கருத்துரிமை,போராடும் உரிமைகள் அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் சனநாயக உரிமைகள் என்று இந்த அரசுகளும், நீதித்துறையும் எப்போதும் கூவுகிறது..!
இந்த உரிமைகளின் அடிப்படை அம்சமே சனநாயகப் பூர்வமான விமர்சனங்களை, எதிர்க்கருத்துக்களை சகிப்புத்தன்மையோடு அணுகுவதும், அனுமதிப்பதுமே ஆகும்.
இதை ஜீரணிக்க முடியாத பாசிச பாஜக தமிழக அமைச்சரவையை தன் காலடியில் வைத்துள்ளதோடு மட்டுமல்லாமல், தமிழக காவல்துறையையும் அவ்வப்போது சேவகர்களாக பயன்படுத்திக் கொள்கிறது.
அதனால்தான் இந்தியாவின் ‘சமூகநீதியின் தொட்டில்’ என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் சமூகநீதியை காக்க குரல் கொடுக்க இயலவில்லை.)
போராடத் தடை.தடை
நாங்கள் ஒன்றிணைந்து ஒலிக்கும் குரலே அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறதோ?
எங்களின் ஆர்ப்பரிக்கும் முழக்கங்கள் அரச கட்டுமானத்தின் அதிகாரத்திமிரை அசைத்து விடுமோ என்ற அச்சமோ?
எங்களின் போராட்ட நிகழ்விற்கு தடை விதிக்கலாம்!
எங்களின் போர்க்குணம் கொண்ட புரட்சிகர சிந்தனைகளுக்கு ஒருபோதும் தடை விதிக்க முடியாது.
தாய்த்தமிழ் மண்ணை பார்ப்பனியம் சூழ விடமாட்டோம்.
தமிழகத்தின் அடிமைத்தளையை நறுக்காமல் விடமாட்டோம்.
இவ்வாறு கூறியுள்ளனர்.