ஸ்டெர்லைட் ஆலை சிக்கல் – பழ.நெடுமாறன் கருத்து

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்…

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை இயங்குவதற்கு உயர்நீதிமன்றம் விதித்தத் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியிருப்பது வருந்தத்தக்கதாகும்.

ஸ்டொ்லைட் ஆலை உள்பட தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் தாமிர ஆலைகள் போன்ற நச்சுக் கழிவுகளை வெளியிட்டு இயற்கை சூழலை மாசுபடுத்தி மக்களுக்கு அழிவை மூட்டும். எத்தகைய ஆலைகளுக்கும் அனுமதி அளிப்பதில்லை என கொள்கை ரீதியான முடிவினை தமிழக அரசு எடுக்கவேண்டும். அதற்கு ஏற்ற வகையில் சட்டமும் திருத்தப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response