திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்ததால், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேர்தல் ஆணையத்தின் மீது மான இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடுகள் தீவிரம்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வெளியிட்டுள்ள குறிப்பில்….
திருவாரூர் இடைத்தேர்தலில் தேர்தல் அறிவித்த 48 மணிநேரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான், தன் அன்புக்கு நெருக்கமான தாய்மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களை வேட்பாளராக அறிவித்தார்.
தேர்தலைக் கண்டு அஞ்சி நடுங்கும் திமுக, அமமுக, அதிமுக போன்ற கட்சிகளிடம் கருத்துக் கேட்டு தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம் துணிச்சலுடனும்,உண்மையுடனும்,ஒழுக்கத்துடனும், தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு களத்தில் இறங்கி வேலை செய்த நாம் தமிழர் கட்சியின் கருத்தைக் கேட்க அழைக்கவோ, கேட்கவோ இல்லை.
மாறாக தேர்தல் அறிவித்த நாள் முதல் இன்று வரை திமுக, அமமுக, அதிமுக கட்சிகளின் மீது தேர்தல் ஆணையத்தால் இதுவரை 80 க்கும் மேற்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சியின் மீது இதுவரை ஒரு வழக்குக் கூடப் பதியப்படவில்லை.
தேர்தல் ரத்து என்பது நேர்மையுடனும்,ஒழுக்கத்துடனும் தேர்தலை எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சியையும்,மக்களையும் அவமானம் படுத்தும் செயல்.
இந்த இழிசெயலை செய்த தேர்தல் ஆணையத்தின் மீது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தல் படி வேட்பாளர் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களால் மானநட்ட வழக்கு தொடுக்கப்பட உள்ளது.
இந்த வழக்கு தொடுப்பதன் மூலம் நாம் தமிழர் கட்சி நேர்மையான ஆண்மையுள்ள கட்சி என்பதை மாற்று முகாம் கோழைகளுக்கு உறுதி செய்யப்படும்.
வழக்கறிஞர்கள் பாசறை
நாம் தமிழர் கட்சி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.