சத்யபாமா எம்.பி முயற்சியில் 1000 கோடி கிடைத்தது – திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

ஏற்றுமதி மற்றும் தொழில் வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ள ஜவுளித் தொழில் நிறுவனங்கள் அரசுக்கு மறைமுகமாகச் செலுத்தும் சில வரியினங்களில் குறிப்பிட்ட சதவீதம், மத்திய அரசு, ஸ்டேட் லெவிஸ் என்ற பெயரில், ஏற்றுமதியாளர்களுக்குத் திரும்ப வழங்கி வருகிறது.

இந்தத் தொகை ஏற்றுமதி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கடந்த மூன்று மாதமாக இந்த தொகை மத்திய அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

இதனால், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் சிரமத்தைச் சந்தித்து வந்தன.

மூன்று மாதமாக நிலுவையில் உள்ள இத்தொகையை வழங்குமாறு ஏற்றுமதியாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருப்பூர் எம்.பி சத்யபாமா, மத்திய அமைச்சரிடம் கடிதம் வாயிலாகவும், நேரிலும் எடுத்துரைத்தார்.

அதன்பயனாக, ஸ்டேட் லெவிஸ் தொகை வழங்கப்படுவதாக நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி மதிப்பில் 1.45 சதவீதம் இந்த ஸ்டேட் லெவிஸ் தொகை, நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து,

மாண்புமிகு மத்திய நிதி/ஐவுளித்துறை அமைச்சகத்திற்கு, தொகுதி ஜவுளி உற்பத்தி/ஏற்றுமதியாளர்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ‘ஸ்டேட் லெவிஸ்’ தொகை ரூ.1000 கோடி விடுவிக்கப்பட்டு, வங்கிக்கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு நன்றி. தக்க தருணத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு உற்பத்தியாளர்களுக்கு பேருதவி என்பதில் ஐயமில்லை

என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சத்யபாமா எம்.பி.

Leave a Response