தமிழ்நாட்டு மக்களா? சங்கிகளின் சண்டித்தனமா? பார்த்துவிடுவோம் – சுப்பராயன் எம்.பி ஆவேசம்

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், ஆ.இராசாவுக்கு ஆதரவாகவும் இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராகவும் செய்துள்ள பதிவு……

தமிழ்நாடு சங்பரிவாரங்களுக்கு விநாச கால விபரீதபுத்தி மண்டையில் ஏறி நண்டு பிராண்டுவது போல் பிராண்டுகிறது போலும்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கோவை வந்தால் விபரீதம் நடக்கும் என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது ஒரு சங்கி!

இது என்ன நாடா கொலைவெறிபிடித்தலைவோரின் காடா?

சட்டங்களும், சட்ட ஆட்சியும் சடலங்களாகி விட்டதா?

நீதிமன்றங்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமா அல்லது நெட்டை நெடுமரம்போல் நின்று பார்க்குமா?

கோடான கோடிக்கணக்கான சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் கல்வி பெறும் உரிமையை மறுக்கும் சனாதன தர்மம் எதற்கு?

சூத்திர சாதியில் பிறந்தவர்களை வேசி மக்கள் என்று தூற்றுகிற மனுநீதி எதற்கு?

மனிதகுலத்தை மேல்சாதி, கீழ்சாதி, தீண்டத்தகாத சாதி என்று பிரித்து மனித சமூகத்தை சின்னாபின்னப்படுத்தியவர்ணஸ்ரம சாத்திரங்கள் எதற்கு?

பிளவுபட்டுப் பிரிந்து கிடக்கிறதமிழ்நாட்டு சூத்திரர்களே,பஞ்சமர்களே
நம்மை பிரித்து சிதைத்த அடையாளங்களை தூக்கி எறியுங்கள்!

ஜெயபேரிகை திக்கெட்டும் முழங்கட்டும்!

விஷமம் நிறைந்த விஷக் கருத்துகள் முளைவிடுகின்றன!

வீறு கொண்டு தமிழ்வேங்கைகளாய் வீதிக்கு வாருங்கள்!

தமிழ்நாட்டு மக்களா, அல்லது சங்கிகளின் சண்டித்தனமா எனப் பார்த்துவிடுவோம்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response