ஏடிஎம் மில் பணம் எடுக்கும் அளவு குறைப்பு – மக்கள் அதிருப்தி

மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனும் எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்கள் நாள்ஒன்றுக்கு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் அளவைக் குறைத்துள்ள விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி, எஸ்பிஐ வங்கியின் கிளாசிஸ், மேஸ்ட்ரோ டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் நாள்ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் எடுத்து வந்த நிலையில், இன்று முதல் ரூ.20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.

ஏடிஎம்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாலும், அந்த முறைகேடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாலும் பணம் எடுக்கும் அளவைக் குறைத்துள்ளதாக எஸ்பிஐ வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதேசமயம் அதிகமான பணத்தை நாள்ஒன்றுக்கு எடுக்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் கிளாஸிக், மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகளை வங்கியில் கொடுத்துவிட்டு, அதிகமான பணம் எடுப்பதற்கான வேறுகார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், எஸ்பிஐ வங்கியின் கோல்டு, பிளாட்டினம் டெபிட் கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நாள்ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐயின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response