இந்திய அணியிலிருந்து தோனி ஓரங்கட்டப்படுகிறாரா?

மேற்கிந்தியத் தீவுகள் கிரிகெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 4 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

இந்த ஆறு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில், அதிரடி மாற்றமாக ரன் குவிக்கத் தடுமாறி வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான 37 வயதான தோனி அணியில் இடம் பெறவில்லை. அணியில் நிலையான இடத்தைப் பிடித்த பிறகு தோனி நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டி20 போட்டி தொடங்கியதில் இருந்து இந்திய அணி ஏறக்குறைய 104 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 93 போட்டிகளில் தோனி இடம் பெற்றிருந்தார். ஆனால், முதல்முறையாக அணியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார்.

அடுத்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுவதற்கு நீண்ட காலம் ஆகும். நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி பிப்ரவரி மாதம் இருப்பதால், ஏறக்குறைய அடுத்து 4 மாதங்களுக்கு தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓரம் கட்டப்படுகிறார்.

இதை பெரும்பானமியோர் வரவேற்கிறார்கள்.

தோனியை அணியில் இருந்து நீக்கி தேர்வுக்குழு எடுத்த முடிவு மிகவும் துணிச்சலானது. அதேசமயம் காலம் கருதி எடுத்த அவசியமான முடிவும் கூட.

தோனி என்ற ஒற்றை மனிதருக்காக ஏராளமான இளம் வீரர்கள் விக்கெட் கீப்பிங், பேட்டிங் வாய்ப்பு அணியில் கிடைக்காமல் இருந்தநிலையில், அவர்களின் திறமையை நிரூபிக்கவும், அணிக்கு புதுரத்தம் பாய்ச்சவும் இந்த முடிவு உதவும் என நம்பலாம்.

உலகக் கோப்பை போட்டி நெருங்கும் நிலையில், இந்திய அணி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது
என்கிற கருத்துகள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கின்றன,

Leave a Response