சென்னையில் புழக்கத்துக்கு வந்த புதிய 100 ரூபாய்

சென்னையில் புதிய 100 ரூபாய் தாள்கள் புழக்கத்திற்கு வந்தன.

மோடி அரசு, நாட்டின் பொருளாதாரம், கறுப்புப் பணம் ஒழிப்பு என்றெல்லாம் சொல்லி 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி,ரூ 500, ரூ 1000 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் தாள்களை, செல்லாததாக அறிவித்து திரும்பப் பெற்றது.

அதைத்தொடர்ந்து, புதிய வடிவமைப்பில் 2000 ரூபாய் தாள்; பின்னர், புதிய 500, 200, 50 ரூபாய் தாள்கள் என, வெளியிடப்பட்டன.

100 ரூபாய் மட்டும், பழைய வடிவமைப்பிலேயே தொடர்ந்தது.தற்போது, 100 ரூபாய் தாளும் புதிய வடிவமைப்பில், ஊதா நிறத்தில் வெளியிடப்பட்டு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் புழக்கத்திற்கு வந்தன.

அப்புதிய 100 ரூபாய் தாள்களை வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

Leave a Response