மணிரத்னம் சார், தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். 6.40 ஷோவுக்கான டிக்கெட் 6.30 வரை இருந்தது எனும் போதே கொஞ்சம் யோசித்தேன். என்ன செய்ய நண்பருக்கான காத்திருப்பு நேரத்தில் பார்த்து வைப்போமென நினைத்தது வினையாகி விட்டது. இத்தனைக்கும் நீங்கள் எத்தனையோ முறை என்னை சோதனைக்குள்ளாக்கி இருந்தும், நான் சுதாரிக்கவில்லை.
போகட்டும், கொஞ்சம் நீங்கள் பார்க்கும் ‘ கேங்ஸ்டர்’ படங்களின் ‘மாதிரி’ ரொம்ப அறுதப் பழசாகி விட்டிருக்கிறது. போதாக்குறைக்கு ‘கேஸ்டிங்’ கில் பெருங்கூட்டம். எல்லோரும் லீட் ஆர்ட்டிஸ்ட்கள் வேறு.
கதை சொல்லத் துவங்கும் குரல் விஜய் சேதுபதி என்றவுடன், அவரது பாத்திரமும், அவர்தான் சூத்ரதாரி என்பது புரிந்து தொலைத்து விட்டது. சீன் பிரிப்பதற்குள் நீங்களும் பெரும்பாடு பட்டிருப்பீர்கள்.
கதையும், திரைக்கதையும் பற்றிய அதீதமான சுயநம்பிக்கையில் கோட்டை விட்டிருக்கிறீர்கள். யாரைச் சொல்லி என்ன ஆயிற்று. தலைவலிக்கிறது. இனி இந்த விபரீதப் பரிட்சையில் இறங்குவதில்லை என்பது உறுதி.
– சுபகுணராஜன்