ஆதார் தொடர்பான தீர்ப்பு மக்களை ஏமாற்றும் வேலை – ஆய்வாளர் கருத்து

ஆதார் தொடர்பான உச்சநீதி மன்றத் தீர்ப்பு எந்த வகையிலும் வரவேற்கத்தக்கது இல்லை.அது ஏமாற்றம் மற்றும் ஏமாற்று .

1)விதி எண் 57 தொடர்பாக வழங்கப்பட்டிருப்பதாக கருதப்படும் சலுகைகள் போலியானதும், ஏமாற்றுதலும் மட்டுமே.
2)விலக்குகள் என்பவை ஒரு பொருட்டே அல்ல. வங்கிக் கணக்கிற்கு ஆதார் தேவையில்லை , தனியார் நிறுவனங்கள் ஆதாரை பெறக் கூடாது என்பதும் ஏமாற்று வேலைதான்.
3)ஏறத்தாழ 43 கோடி எண்ணிக்கை வருமானவரி அட்டைகளோடு( pan card ) ஆதாரை இணைத்து விட்டு , வங்கிக் கணக்கிற்கு விலக்கு அளிப்பது யாரை ஏமாற்றும் வேலை.
4. அதே போல் தொலைதொடர்பு இணைப்புகளுக்கு ஆதார் கேட்க கூடாது என்பதும் ஏமாற்றே. ஏற்கனவே வாங்கப்பட்டு விட்ட ஆதார் தகவலை அவற்றின் ஆவணங்களிலிருந்து நீக்கும் வேலையை அவர்கள் வசமே ஒப்படைத்திருப்பது வேடிக்கை. பெறப்பட்ட தகவல் சென்று சேரும் இடம் யாரும் அறிய மாட்டார்கள். அவற்றை திரும்பப் பெறுவது என்ற பேச்சிற்கே இடமில்லை.
5. அதே போல் அரசின் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட நல உதவித் திட்டங்களைப் பெற ஆதார் தேவை என்றாகி விடும் போது, ஆதார் வரம்பிற்கு வெளியே யார் இருப்பார்கள் ( ஏற்கனவே வருமானவரி அட்டையோடு இணைக்கப்பட்ட ஆதார் 43 கோடி பேரை / நிறுவனங்களை உள்ளே கொண்டு வந்து விடுகிறது )
6. எனவே ஆதார் எல்லா நிலையிலும் தேவை என்று அறிவித்து விட்டு, நீதியரசர் சந்திர சூட் அவர்களின் மறுப்பு வாதங்கள் கொண்ட தீர்ப்பில் கண்டுள்ளது போல் ஆதார் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பும், அப்படி நேரும் போது நஷ்ட ஈடு கொடுப்பது குறித்த விதிகளை சேர்த்திருக்கலாம்.
7. என்ன ஆனால் என்ன, சட்டவிதிகளால் உருவாகும் அரசுக்கு எப்படி ‘ மனம் ‘ ‘ மனசாட்சி ‘ இருக்க முடியாதோ , அதேதான் அதனை உருவாக்கும் சட்டங்களிற்கும் பொருந்தும்.
8. ஆழமான சட்டம் குறித்த ஆய்வு ஒன்றை தெளிவாக வெளிப்படுத்தும். ஆம், அந்த விதி எதை வலியுறுத்த / வழங்க / தடுக்க உருவாக்கப்படுகிறதோ , அதன் அடிப்படைகளையே சாய்த்து விடும் கூறுகளையும் அதன் பகுதியாக கொண்டிருக்கும் என்பதுதான். சட்ட மொழியின் உள்ளார்ந்த வடிவமே அதுதான் . விளக்கங்களால் அழிக்கப்படக் கூடியதான விதிகள் . அதுதான் சட்டம். அதன்படியேதான் அரசு .
9. மிஸ்ரா கணக்கு தீர்க்கும் வேகத்தில் இருப்பதாகத் தெரிகிறது .

– சுபகுணராஜன்

Leave a Response