
தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் மாதுளை சாகுபடிக்கு ஏதுவாக, மாதுளை உற்பத்தியாளர் சங்க அறக்கட்டளை, தமிழ்நாடு, இந்திய மாதுளை உற்பத்தியாளர் சங்கம், புனே, மற்றும் வேளாண் அறிவியல் நிலையம், மைராடா கோபி இணைந்து நடத்தும் ‘மாதுளை உற்பத்தி மற்றும் சந்தைபடுத்துதல் தொடர்பான கண்காட்சி மற்றும் பயிற்சி
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் புவனபவனம் திருமண மண்டபத்தில் செப்டம்பர் மாதம் 6 முதல் 8 ஆம் தேதி வரை கருத்தரங்கம் நடைபெற்றது.
இதற்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி வழங்கக் கோரி, திருப்பூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக சத்யபாமா கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கருத்தரங்கத்துக்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி குறித்து பரிசீலனை செய்து பதிலை தெரிவிப்பதாக உறுதியளித்திருந்தார்.
சத்யபாமா கொடுத்த மனுவில்,
எனது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், அந்தியூர், பவானி, தாராபுரம் ஆகிய ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாதுளை பயிரிடுதலுக்கான முயற்சியில் தமிழ்நாடு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதை தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்.
மாதுளை பயிரிடுதல் பற்றிய நுணுக்கங்களை இந்தப் பகுதி விவசாயிகள் அதிகம் அறியாதிருப்பதால் அவர்களுக்கு அது பற்றிய பயிற்சியை அளிப்பது அவசியம்.
இதற்காக தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செப்டம்பர் மாதம் 6 முதல் 8 ஆம் தேதி வரை மாதுளை பற்றி மூன்று நாள் கருத்தரங்கத்துக்கு சோலாப்பூர் NRC, கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சென்னை NHB, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை ஆகியவற்றுடன் இணைந்து கோபிச்செட்டிப்பாளையம் மாதுளை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மாதுளை உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் விவசாயிகள் மாதுளைகளை பயிரிடுதலில் ஈடுபட உதவும் என்பதால் உங்களை இந்தக் கருத்தரங்கத்தை நடத்த இந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்குமாறு நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
மிகப் பயன்பாடு உடைய தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு இந்த நிகழ்ச்சி வழிவகுக்கும் என்பதால் எங்கள் பகுதி விவசாயிகளுடன் தங்கள் இதற்கான நிதி உதவிக்கான அனுமதியையும் வழங்கக்கோருகிறேன்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
சத்யபாமாவின் மனுவை ஏற்றுக்கொண்ட வேளாண்மைத்துறை அமைச்சர்,இம்முயற்சிக்கான தொடக்க நிதியாக ரூ.1 இலட்சத்தை முதல்கட்டமாக ஒதுக்கியுள்ளார்.
அதனால் இம்முயற்சியில் ஈடுபட்ட விவசாயிகள் மிகுந்த உற்சாகத்தோடு கருத்தரங்கை நடத்தினர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட சத்யபாமா எம்.பி, இந்த முயற்சியை அங்கீகரித்து, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கருத்தரங்கிற்கு நிதி ஒதுக்கியமைக்கு, தொகுதி விவசாய மக்களின் சார்பாக மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
என்று கூறினார்.
இக்கருத்தரங்கு வெற்றிகரமாக நடக்க அரும்பாடுபட்ட சத்யபாமா எம்பி க்கு விவசாய அமைப்புகளும் விவசாயிகளும் நன்றி தெரிவித்தனர்.


